sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரி உரிமையாளர்கள் போராட்டம்: வணிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு

/

லாரி உரிமையாளர்கள் போராட்டம்: வணிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு

லாரி உரிமையாளர்கள் போராட்டம்: வணிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு

லாரி உரிமையாளர்கள் போராட்டம்: வணிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு


ADDED : ஆக 01, 2011 02:42 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் நடந்த அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழுவில், லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு பெருந்துறை ரோடு, சாயம் மற்றும் கெமிக்கல் வணிகர்கள் சங்க மண்டபத்தில், மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.தலைவர் சிவநேசன் தலைமை வகித்தார். ஈரோடு சாயம் கெமிக்கல் வியாபாரிகள் சங்க தலைவர் சின்னுசாமி முன்னிலை வகித்தார்.

ஈரோடு இளம் வணிகர் நலம் நாடும் சங்க தலைவர் அன்புக்கரசு வரவேற்றார். மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்ட 240 கோடி ரூபாய் திட்ட வடிவில் ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி முனையத்தை, பெருந்துறை சிப்காட்டில் அமைய வேண்டும்.வேளாண் உணவு பூங்காவை தமிழக அரசு, பெருந்துறை சிப்காட்டில் ஏற்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தாலுகா தலைமையிடத்திலும் குளிர்சாதன கிடங்கு அமைய வேண்டும்.சாய கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜவுளிப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 10 சதவீத சென்வாட் வரியை நீக்க வேண்டும்.கனி மார்க்கெட் வளாகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் துவங்க நடவடிக்கை வேண்டும். ஈரோட்டில் ஆய்வுகள் முடிந்த நிலையில் உள்ள பகுதியில் புறவழிச்சாலை வேலைகள் துவக்க வேண்டும். 80 அடி அகல சாலையை போக்குவரத்துக்காக திறக்க வேண்டும். வ.உ.சி., பூங்காவில் லாரி நிறுத்த வளாகம் இருந்த பகுதியில், குளிர் சாதன உள் விளையாட்டு அரங்கு, நிரந்தர தொழில் கண்காட்சி மையம் ஆகியன அமைத்தல் வேண்டும்.

கையடக்க குழல் விளக்குகள் மீதான வரியை 14.5ல் இருந்து 5 சதவீதமாக்க வேண்டும். ஆன் லைன் மூலம் வேட் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும். தொழில் வரியை ஈரோடு மாநகராட்சி ஏற்புடைய வகையில் மாற்றம் செய்ய வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் இடையே மின் ரயில் இயக்க வேண்டும்.டீஸல் விலை குறைப்பு, டோல்கேட் கட்டணம் குறைப்பு போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆகஸ்ட் 18 முதல் தேசிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு, ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us