sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவசுப்பிரமணியம் குழு அறிக்கை வெளியாகுமா?

/

சிவசுப்பிரமணியம் குழு அறிக்கை வெளியாகுமா?

சிவசுப்பிரமணியம் குழு அறிக்கை வெளியாகுமா?

சிவசுப்பிரமணியம் குழு அறிக்கை வெளியாகுமா?


ADDED : ஆக 21, 2011 02:30 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: 'கள் மீதான தடை நீக்குவது குறித்து, அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சிவசுப்பிரமணியம் குழு அறிக்கையை, அரசு வெளியிட வேண்டும்' என, கள் இயக்கம் கோரியுள்ளது.

தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய மஞ்சள் கவுன்சில் தலைவர் தெய்வசிகாமணி, கீழ்பவானி முறைநீர் பாசன சபை கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள் மீதான ஆளுமையை அரசு கைவிட வேண்டும். கள்ளுக்கான தடையை அரசு நீக்க வேண்டும்.



தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான குழு, மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம், தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி, தனது அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. அப்போதைய தி.மு.க., அரசு அந்த அறிக்கையை வெளியிட மறுத்து விட்டது. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு உடனடியாக அக்குழு அறிக்கையை வெளியிட வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








      Dinamalar
      Follow us