sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்

/

முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்

முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்

முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்


ADDED : ஆக 21, 2011 02:33 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்: ''தமிழக சட்டசபை புதிய கட்டிடத்தை டில்லி மருத்துவமனை போல் ஆக்கப்படும் என முதல்வர் அறிவித்ததை, எதிர்க்கட்சி தலைவர் முதல் அனைவரும் பாராட்டுகின்றனர்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

கோபி தாலுகா அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 341 பயனாளிகளுக்கு, 1.75 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: சென்ற வாரம் மனுக்கள் பெற்றோம். நடப்பு வாரம் நிவாரணம் வழங்குகிறோம். அந்த அளவுக்கு ஆட்சி வேகமாக நடக்கிறது. தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் 22 மணி நேரம் ஓய்யாமல் உழைக்கிறார். அவருக்கு பின்னால் ஆட்சி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்தில் முதலில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கோபி தொகுதியிலும், பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் சுழன்று பணிபுரிவதால், மக்களுக்கு நலப்பணிகள் உடனடியாக கிடைக்கிறது.



தற்போது வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமானதாக உள்ளது. இதை யாரும் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தவில்லை. முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட சட்டசபை புதிய கட்டிடம், டில்லி மருத்துவமனை போல் ஆக்கப்படும் என, முதல்வர் அறிவித்ததை, எதிர்க்கட்சி தலைவர் பண்ருட்டி முதல் அனைவரும் பாராட்டினர். தமிழக மக்களின் நலனுக்காக முதல்வரின் ஆட்சி மின்னல் வேகத்தில் செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகா வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், வெங்கடாசலம், ஆர்.டி.ஓ., பழனிசாமி, தாசில்தார் முருகன், முன்னாள் எம்.பி., காளியப்பன், முன்னாள் வாரிய தலைவர் சிந்துரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா மேடைக்கு அமைச்சர் வந்தபோது, 500க்கும் மேற்பட்ட மக்கள், அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.








      Dinamalar
      Follow us