sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அமைச்சர் வருகையால் சுத்தமான தாலுகா ஆஃபீஸ்

/

அமைச்சர் வருகையால் சுத்தமான தாலுகா ஆஃபீஸ்

அமைச்சர் வருகையால் சுத்தமான தாலுகா ஆஃபீஸ்

அமைச்சர் வருகையால் சுத்தமான தாலுகா ஆஃபீஸ்


ADDED : ஆக 21, 2011 02:33 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்: அமைச்சர் வருகையால் கோபி தாலுகா அலுவலகம் திடீரென சுத்தமானது.

கோபி தாலுகா அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அமைச்சர் வருகையையொட்டி தாலுகா அலுவலகம் நேற்று திடீரென சுத்தம் செய்யப்பட்டது.

கோபி தாலுகா அலுவலகத்துக்கு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ஜாதிச்சான்று, வருமானச் சான்று மற்றும் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிக்காக, நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் வரும் தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி கிடையாது. வீணான பொருட்கள், மரங்கள் மற்றும் குப்பை அலுவலக வளாகத்தில் தேங்கி கிடந்தது.



தாலுகா அலுவலகத்துக்கு கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் வந்தபோது கூட தாலுகா அலுவலக வளாகம் சுத்தம் செய்யப்படவில்லை. பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்க, நேற்று காலை தாலுகா அலுவலகத்துக்கு, வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். அமைச்சர் வருகையால், இரண்டு நாட்களாக சுத்தம் செய்யும் பணி நடந்தது. வீணாக கிடந்த மரங்கள், குப்பை ஆகியவை அகற்றப்பட்டது. நேற்று காலை அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரை தவிர, மற்றவர்கள் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. முகப்பு வாயில் கேட் பூட்டப்பட்டது. சிவில் சப்ளை தாசில்தார் அலுவலகத்துக்கு வந்த மக்கள் வெளியில் காத்திருந்தனர்.








      Dinamalar
      Follow us