/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வறுமைக்கோடு குறித்த புதிய நடைமுறைக்கு கம்யூ., எதிர்ப்பு
/
வறுமைக்கோடு குறித்த புதிய நடைமுறைக்கு கம்யூ., எதிர்ப்பு
வறுமைக்கோடு குறித்த புதிய நடைமுறைக்கு கம்யூ., எதிர்ப்பு
வறுமைக்கோடு குறித்த புதிய நடைமுறைக்கு கம்யூ., எதிர்ப்பு
ADDED : ஆக 21, 2011 02:33 AM
தாராபுரம்: ''கிராமங்களில் 20 ரூபாய், நகரில் 30 ரூபாய் சம்பாதிப்பவர்கள் தான் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற புதிய கொள்கையை, மத்திய அரசு கொண்டு வருமானால், ஏழை, எளிய விவசாய கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்,'' என, கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு நல்லகண்ணு பேசினார்.
தாராபுரத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து நல்லகண்ணு பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஏழு கோடிக்கு மேலான விவசாய கூலித் தொழிலாளர்களில், தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் உள்ளனர். ஆண்டுக்கு 85 நாட்கள் மட்டுமே விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலும் தலித் மக்களே விவசாய கூலிகளாக உள்ளனர். இவர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, சம வேலை ஆகியவற்றை பெற்றுத் தருவதில் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. விவசாய விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, 56 சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் விளைபொருட்களுக்கு கடுமையான தட்டுபாடு உருவாகும்.
'கிராமப்புறங்களில் 20 ரூபாயும், நகர்ப்புறங்களில் 30 ரூபாயும் ஊதியம் பெறும் நபர்களே, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்' என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திட்டம் அமல்படுத்தினால், ஏழை, எளிய விவசாய கூலித்தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். தாராபுரம், காங்கேயம் ஆகிய தாலுகா பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உபரி நிலங்கள், நில உச்சவரம்பு சட்டத்தில் அரசு கையகப்படுத்திய இடங்கள் உள்ளன. இவற்றை, தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனைகளாக அரசு வழங்கியது. ஆனால், இவர்களது நிலங்களை, ஆதிக்க சக்திகள் வைத்துக் கொண்டு, அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். ஆதிக்க சக்திகளை எதிர்த்து தலித் கூலித் தொழிலாளர்கள் குடிசை வீடு கூட கட்ட முடியாத அவலநிலை உள்ளது. அந்த இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

