/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கெரஸின் வழங்காததால் பவானியில் மறியல் முயற்சி
/
கெரஸின் வழங்காததால் பவானியில் மறியல் முயற்சி
ADDED : ஆக 21, 2011 02:33 AM
பவானி: மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து, பவானியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
பவானி நகராட்சி 27வது வார்டு பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த வைஜெயந்தி மாலா (52) என்பவர், கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். இவர் முறையாக மண்ணெண்ணெய் வழங்குவதில்லை என்ற புகார் நீண்டகாலமாக உள்ளது. மக்கள் எப்போது சென்றாலும் மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என்றே கூறி வந்துள்ளார். நேற்று இங்கு கூடிய பொதுமக்கள், முறையாக மண்ணெண்ணெய் வழங்க கோரி, பவானி பூக்கடை கார்னரில், மறியலில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த, வருவாய் ஆய்வாளர் ராஜமாணிக்கம் மற்றும் போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 'முறையாக மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்கள் உறுதியளித்தனர். பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

