sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குப்பை மேடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு

/

குப்பை மேடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு

குப்பை மேடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு

குப்பை மேடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு


ADDED : செப் 07, 2011 01:49 AM

Google News

ADDED : செப் 07, 2011 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள சவக்கிடங்கு, குப்பை கிடங்காக மாறியுள்ளது.

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு தினமும் 2,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் பின்புறம், சவக்கிடங்கு உள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், விபத்தில் உயிரிழப்பவர்கள், தற்கொலை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்கள் என்று தினமும் ஐந்து முதல் பத்துக்கும் மேற்பட்ட உடல்கள் வருகின்றன.



அரசு மருத்துவமனையில் மற்ற வார்டுகளை போலவே, சவக்கிடங்கையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால், இது குப்பை கிடங்காக மாறி வருகிறது. மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் சேரும் மருத்துவ கழிவு, பிற குப்பை இங்கு கொட்டப்படுகிறது. ஆறு மாதத்துக்கும் மேலாக கொட்டிய குப்பை அகற்றப்படாமல் குவிந்துள்ளது. இதனால், மருத்துவமனை முழுக்க கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. சில சமயங்களில் மருத்துவமனை ஊழியர்கள் குப்பைக்கு தீ வைக்கின்றனர். அப்போது, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் மருந்து நெடியுடன் புகை மூட்டம் சூழ்கிறது. குப்பையை முறையாக அகற்ற வேண்டும்.








      Dinamalar
      Follow us