ADDED : செப் 07, 2011 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வ.உ.சி.
விளையாட்டு மைதானத்தில், பாரதியார் தின, குடியரசு தின மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் 5ம் தேதி துவங்கி, இன்று வரை நடக்கிறது. கபடி, வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து மற்றும் 100 மீ., 200, 400, 1,200 மீ., ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இன்று இறுதிப்போட்டிகள் நடக்கிறது.

