sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்

/

அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்

அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்

அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்


ADDED : செப் 08, 2011 02:51 AM

Google News

ADDED : செப் 08, 2011 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''அனைத்து மாவட்டங்களிலும் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, அருங்காட்சியகங்களின் ஆணையர் ஜவஹர் தெரிவித்தார்.ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சென்னை அருங்காட்சியகத்தில் சிறுவர்களுக்காக, 75 லட்சம் ரூபாயில், '3டி' தியேட்டர் அமைக்கப்பட உள்ளது. மாநிலத்தில் சென்னை தவிர, 20 மாவட்டங்களில் அரசு அருங்காட்சிகம் உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அரசு முடிவு செய்யும்.பிற மாவட்டங்களில் நிலங்களை தோண்டும்போது கிடைக்கும் சிலைகள், சென்னை அருங்காட்சியகத்தில் மொத்தமாக வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிலைகளை காலம், ஏற்கனவே அதை ஒத்த சிலைகள் இல்லாமல் இருத்தல் போன்ற பல்வேறு விதிகளின்படி காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே அதுபோன்ற சிலை இருந்தால், அவை பாதுகாப்பாக மட்டும் வைக்கப்படும். இருப்பினும், இவற்றை பிற மாவட்டங்களில் பார்வைக்கு வைப்பது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.

அருங்காட்சியகங்களை இலவசமாக பார்க்க அனுமதிக்க இயலாது. அரசின் விதிப்படி குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us