sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆறு நாளில் 68 டன் நெல் கொள்முதல் விவசாயிகள் கேட்கும் வசதி கிடைக்குமா?

/

ஆறு நாளில் 68 டன் நெல் கொள்முதல் விவசாயிகள் கேட்கும் வசதி கிடைக்குமா?

ஆறு நாளில் 68 டன் நெல் கொள்முதல் விவசாயிகள் கேட்கும் வசதி கிடைக்குமா?

ஆறு நாளில் 68 டன் நெல் கொள்முதல் விவசாயிகள் கேட்கும் வசதி கிடைக்குமா?


ADDED : செப் 08, 2011 03:00 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்:கோபி ஒத்தக்குதிரை உள்ளிட்ட மூன்று அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சென்ற ஆறு நாட்களில் 68 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய வசதி செய்து தரவில்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் நெல் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. பொலவகாளிபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியாம்பாளையம், டி.என்.பாளையம், காசிபாளையம், அத்தாணி, புதுக்கரைபுதூர், கள்ளிபட்டி, கூகலூர் ஆகிய ஒன்பது இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சன்ன ரகத்துக்கு 11 ரூபாயும், குண்டு ரகத்துக்கு 10.50 ரூபாயும் விலை கிடைக்கிறது. அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரித்து, கடந்த ஆறு நாட்களில் 68 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குண்டு ரகத்தை விட சன்ன ரக நெல் அதிகம் வரத்தாகிறது. குண்டு ரகத்துக்கு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 10.50 பைசாதான் வழங்கப்படுகிறது. ஆனால், வெளிமார்க்கெட்டில் 15 ரூபாய் வரை வியாபாரிகள் தருகின்றனர். இதனால், குண்டு ரக நெல்லை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யவே விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய வசதிகள் இதுவரை செய்து தரவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வந்தால் உடனடியாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை.

வளாகத்திலேயே நெல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டி உள்ளது. திறந்தவெளி மைதானமாக இருப்பதாலும், கான்கிரீட் தளம் இல்லாததாலும், நெல் மூட்டைகளை தரையில் வைக்க விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறான நிலையில் திறந்தவெளி மைதானத்தில் நெல் மூட்டைகளை வைத்து, மழை பெய்து விட்டதால் நனைந்து விடும். நெல்லில் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதாக கூறி, திருப்பி அனுப்பிவிடுவர். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் வைக்க போதிய வசதி செய்து தர வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. விவசாயிகள் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us