sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மோப்பநாய்பிரிவுக்கு வந்த "தாமரை'

/

ஈரோடு மோப்பநாய்பிரிவுக்கு வந்த "தாமரை'

ஈரோடு மோப்பநாய்பிரிவுக்கு வந்த "தாமரை'

ஈரோடு மோப்பநாய்பிரிவுக்கு வந்த "தாமரை'


ADDED : செப் 08, 2011 03:00 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கோவை நாய் படை பயிற்சி பள்ளியில், வெடிகுண்டு கண்டறியும் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய், 'தாமரை' ஈரோடு மோப்பநாய் பிரிவுக்கு வந்தது.

ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், தனியாக மோப்பநாய் பிரிவு அமைந்துள்ளது. இங்குள்ள நாய்கள், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தாராபுரம், திருப்பூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளுக்கும் துப்பறியும் பணிக்கு அழைத்து செல்லப்படுகின்றன.குற்றச் செயல்கனை கண்டறிய ராக்கி (7), டைகர்(9), விக்கி (7) ஆகிய மூன்று மோப்ப நாய்கள் உள்ளன. வெடிகுண்டு, டெட்டனேட்டர் போன்றவற்றை கண்டறிய, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த பாபி (7) என்ற மோப்ப நாய் இறந்து போனது.

இதற்கு பதில், 'தாமரை' என்ற ஒன்றரை வயது குட்டி நாய் வரவழைக்கப்பட்டு, கோவையில் உள்ள துப்பறியும் நாய்ப்படை பள்ளியில் பயிற்சி பெற்றது. சிறப்பு பயிற்சிகளை முடித்துக்கொண்டு, நேற்று ஈரோடு மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.கோவையில் பயிற்சியளித்த திருமுருகன், கருணாகரன் ஆகியோர், ஈரோடு மோப்பநாய் பிரிவில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் கூறுகையில், 'வெடிகுண்டு, வெடிமருந்து, எலக்ட்ரானிக் கருவிகள், பொது இடங்களில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கிடக்கும் பொருட்களை துப்பறியும் பயிற்சி, 'தாமரை'க்கு அளிக்கப்பட்டுள்ளது, என்றனர்.






      Dinamalar
      Follow us