sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூலிகை பயன்பாடு குறித்த புத்தகம்விரைவில் வெளியீடு: ஆணையர் தகவல்

/

மூலிகை பயன்பாடு குறித்த புத்தகம்விரைவில் வெளியீடு: ஆணையர் தகவல்

மூலிகை பயன்பாடு குறித்த புத்தகம்விரைவில் வெளியீடு: ஆணையர் தகவல்

மூலிகை பயன்பாடு குறித்த புத்தகம்விரைவில் வெளியீடு: ஆணையர் தகவல்


ADDED : செப் 08, 2011 03:01 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:''மூலிகை பயன்பாடு குறித்த புத்தகம் விரைவில் வெளியிடப்படும்,'' என, அரசு அருங்காட்சியகங்களின் ஆணையர் ஜவஹர் தெரிவித்தார்.ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் நேற்று மூலிகை கண்காட்சியை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:இந்தியாவில் துவங்கிய மிகப்பழமையான, இரண்டாவது அருங்காட்சியகம் சென்னையில் உள்ளது. செல்வந்தர்கள், ராஜாக்கள் சேகரித்த பொருட்கள், சிலைகள், நாணயங்கள், கலைப்பொருட்கள், அவர்கள் மட்டுமே பார்க்கும் படியாக இருந்தது. தற்போது, அனைவரும் பார்க்கும்படியாகி உள்ளது. தற்போது தனி நபர், குடும்பம், குறிப்பிட்ட பொருட்கள் குறித்து கூட கண்காட்சி ஏற்பாடு செய்கின்றனர்.

சென்னையைத் தவிர்த்து, 20 மாவட்டங்களில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல், மானுடவியல், கலை, நாணயங்கள், உயிரியல், விலங்கியல், சிறுவர்களுக்கான அரும்பொருட்கள் என பலவும் உள்ளன. 'அனைவருக்கும் அருங்காட்சியகம் என மாற்ற வேண்டும்' என்பது முதல்வர் உத்தரவு.

இதனால், அருங்காட்சியகத்தில் உள்ளவைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு குறித்த நாட்களில் எடுத்துச் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். சென்னையில் 12 நாட்கள் இதுபோன்ற நிகழ்ச்சி நடந்துள்ளது.ஓலைச்சுவடிகளை சேகரித்து, ஆவணப்படுத்தி, பாதுகாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அருங்காட்சியகத் துறை தலைமையில் பல மாவட்டங்களில் ஓலைச்சுவடி மையங்கள் நிறுவ உள்ளோம். மூலிகை செடிகளின் நன்மைகள், எந்த நோய்க்கு என்ன செடிகளை பயன்படுத்தலாம் என்பதை உள்ளடக்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஈரோடு கலெக்டர் காமராஜ் பேசுகையில், ''நகர வாழ்க்கையால் மக்கள் மூலிகைகளை மறந்துவிட்டனர். எத்தனை ஆங்கில மருந்துகள் வந்தாலும், மூலிகைகளுக்கு இன்னும் மதிப்புள்ளது. மூலிகைகளால் பக்க விளைவு இருக்காது. இதை மாணவர்கள், இளைஞர்கள் அறியச் செய்ய வேண்டும். அருங்காட்சியகம் உதவியுடன், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் மூலிகை கண்காட்சி விரைவில் நடத்தப்படும்,'' என்றார்.அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லை அரசு வரவேற்றார். தொழில் நுட்ப உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us