sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை ஆரம்பம்

/

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை ஆரம்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை ஆரம்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை ஆரம்பம்


ADDED : செப் 08, 2011 03:03 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை பணி தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சியில் நேற்று துவங்கியது. வரும் 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கவும், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஏதுவாக, மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் ஆகிய இடங்களில், சிறப்பு பிரிவு நேற்று முதல் இயங்குகிறது.பொதுமக்கள் இங்கு விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். காலை 11 மணி முதல், மாலை 5 மணி வரை இந்த சிறப்பு பிரிவு செயல்படும். 10ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள், அந்தந்த வாக்குச்சாவடி பகுதிக்கு அனுப்பப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.

ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதியை சேர்ந்தவர்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்திலும், மாநகராட்சி உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள், மற்றும் ஈரோடு கிழக்கு பகுதி வாக்காளர்கள், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.மற்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம்.ஈரோடு தாலுகா அலுவலகத்தில், நேற்று காலை, தேர்தல் அலுவலர் மாசிலாமணி வாக்காளர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கினார். தேர்தல் உதவி அலுவலர் குணசேகரன் உடனிருந்தார்.அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், மாணவ, மாணவியருக்கு வங்கியில் கல்விக்கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுவதால், மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து வழங்கிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us