sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரியில் தேங்கிய குப்பை

/

காவிரியில் தேங்கிய குப்பை

காவிரியில் தேங்கிய குப்பை

காவிரியில் தேங்கிய குப்பை


ADDED : செப் 08, 2011 03:05 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின், பூ, மாலை உள்ளிட்ட குப்பை கழிவு பெருமளவில் சேர்ந்துள்ளது.தமிழகத்தில் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பொதுமக்கள் ஆர்வமுடன் வழிபட்டனர். ஐந்து நாட்கள் வழிபாட்டுக்கு பின், 5ம் தேதி சிலைகளை ஊர்வலமாக மக்கள் எடுத்துச்சென்று, காவிரி ஆற்றில் கரைத்தனர்.ஈரோடு நகரின் பல இடங்களில் இருந்தும், பள்ளிபாளையம், வெப்படை, ஆகிய இடங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட சிலைகள் எடுத்துவரப்பட்டு காவிரியில் கரையில் வைத்து கரைக்கப்பட்டன.

சிலை கரைத்த போது, பூ மாலைகள் மற்றும் வாழைக் கன்றுகளை கரைகளில் அப்படியே போட்டுச்சென்றனர். இதனால் காவிரி கரையில் குப்பைக் கழிவு தேங்கி, அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.தவிர, ஆற்றில் போடப்பட்ட சிலைகளும், மூன்று நாட்களுக்கு மேலாகியும், கரையாமல் அப்படியே தண்ணீரினுள் கிடக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக, இக்கழிவுகளை சுகாதாரத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us