ADDED : செப் 16, 2011 01:28 AM
ஈரோடு: அரக்கோணத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நேற்று முதல் வழக்கம் போல் இயங்கின.
கடந்த 13ம் தேதி இரவு அரக்கோணம் அருகே சித்தேரியில் சிக்னலுக்காக நின்றிருந்த பாசஞ்சர் ரயில் மீது மின்சார ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதனால், காட்பாடி வழியே செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக, கடந்த 13ம் தேதி இரவு 10.40 மணிக்கு சென்னையிலிருந்து ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து புறப்படும் சேரன், மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் புளு மவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு ரயில் பாதை சீரமைப்பு பணி முடிந்தது. ஈரோட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களும் நேற்று வழக்கம் போல் புறப்பட்டு சென்றன.

