/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு ஓட்டை பிரித்துபணம், நகை திருட்டு
/
வீட்டு ஓட்டை பிரித்துபணம், நகை திருட்டு
ADDED : செப் 17, 2011 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சித்தோடு ஆலுச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி (45).
கணவர்
மறைவுக்கு பின், தனது இரு மகன்களுடன் வசிக்கிறார். நேற்று காலை வீட்டை
பூட்டி விட்டு, மாடு மேய்க்க சென்றார். மதியம் வீட்டுக்கு திரும்பி
வந்தார்.அப்போது, கூரை ஓடு பிரிக்கப்பட்டு, சேலையைக் கட்டி உள்ளே இறங்கிய
திருடர்கள், பீரோவின் மீதிருந்த சாவியால் திறந்து, ஐந்து பவுன் நகை, 20
ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.பவானி டி.எஸ்.பி.,
தங்கவேல், சித்தோடு இன்ஸ்பெக்டர் நமசிவாயம் மற்றும் கைரேகை நிபுணர்கள்
விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் ஓட்டைபிரித்து நடந்த திருட்டு
சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.