/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணம் கைமாறிய வழக்கு: 61 பேரிடம் விசாரணை
/
பணம் கைமாறிய வழக்கு: 61 பேரிடம் விசாரணை
ADDED : செப் 17, 2011 02:15 AM
கோபிசெட்டிபாளையம்: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில் பணம் கைமாறிய வழக்கு
தொடர்பாக இதுவரை, 61 பேரிடம் விசாரணை நடந்தது.சந்தன வீரப்பனால், 2000
ஜூலை 30ம் தேதி, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். ராஜ்குமாரை
விடுவிக்க பல கோடி ரூபாய் பணம் கை மாறியதாக எழுந்த புகாரின் பேரில்,
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 26 பேர் மீது, சேலம் மாவட்டம்
கொளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கோபி விரைவு நீதிமன்றத்தில்
வழக்கு நடக்கிறது.
போலீஸார் தரப்பு 87 சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. நேற்று சாட்சி
விசராணை, நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் துவங்கியது. அப்போதைய கொளத்தூர்
இன்ஸ்பெக்டரான, நாமக்கல் டி.எஸ்.பி., அண்ணாமலை, கர்நாடக ரகசிய பிரிவு சையது
அமீது ஆகிய இருவரிடம் நேற்று விசாரணை நடந்தது.இதுவரை 61 பேரிடம் விசாரணை
நடந்துள்ளது. வழக்கு தொடர்பாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 24 பேர்
நீதிமன்றத்தின் ஆஜராகினர். வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டது.