/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மார்க் கம்யூ., வலியுறுத்தல் அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம்
/
மார்க் கம்யூ., வலியுறுத்தல் அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம்
மார்க் கம்யூ., வலியுறுத்தல் அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம்
மார்க் கம்யூ., வலியுறுத்தல் அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம்
ADDED : செப் 19, 2011 01:24 AM
ஈரோடு: ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர 7வது மாநாடு
நடந்தது.கிருஷ்ணன், அம்மணியம்மாள், இளையராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஈரோடு பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் கட்டி நீண்ட காலம்
ஆகிவிட்டது. தற்போதைய போக்குவரத்து தேவையை இப்பாலம் ஈடுகட்ட முடியாத அளவு
உள்ளது. எனவே, உடன் புதிய பாலம் கட்ட வேண்டும்.நகரில் போக்குவரத்து நெரிசல்
நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பல ரோடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சாலை
சந்திப்பான, அரசு மருத்துவமனை சந்திப்பை மையமாக கொண்டு மேம்பாலம் கட்ட
வேண்டும். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நடைபாதை மேம்பாலம் பணி தொடர்ந்து நடத்தி
முடிக்க வேண்டும்.ஈரோட்டில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் போராட்டம்,
உண்ணாவிரத போராட்டம் நடத்த மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் அனுமதி
மறுக்கப்படுகிறது. இது ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். மாநகராட்சி அலுவலகம்,
கலெக்டர் அலுவலகம் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த
அனுமதி வழங்க வேண்டும். மாநகராட்சி தாய்சேய் நலவிடுதி ஈரோடு காந்திஜி
ரோட்டில் உள்ளது. 8 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இவ்விடுதி மக்கள்
பயன்பாட்டுக்கு இல்லாமல், பல மாதமாக பூட்டிக்கிடக்கிறது. உடன்
செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.ஈரோடு மாநகராட்சியில்
செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்தை உரிய காலத்தில் நிறைவு செய்ய
வேண்டும். இத்திட்டத்துக்காக வெட்டப்பட்ட ரோடுகள், குழிகளை சீரமைக்க
வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு
நடந்துள்ளது. இத்திட்ட செலவினங்கள் குறித்து முழு ஆய்வுக்கு உட்படுத்த
வேண்டும். நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
சாயம், தோல் கழிவு நீர் மண்ணில் கலக்காமல், ஆறுகள், வாய்காலில்
கலக்காமல் பாதுகாக்க வேண்டும். இப்பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வை
ஏற்படுத்த வேண்டும், எனக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட செயலாளர்
மாரிமுத்து துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் துரைராஜ் நிறைவு
செய்தார். தங்கவேலு, சுப்பிரமணியம் உட்பட பலர் பேசினர். நகர செயலாளராக
சுப்பிரமணியம், நகர கமிட்டி உறுப்பினர்களாக தங்கவேல், சுந்தரராஜன்,
செல்லதுரை, அர்த்தனாரி, ராஜு, கிருஷ்ணன், இளையராஜா, அம்மணியம்மாள் ஆகியோர்
தேர்வு செய்யப்பட்டனர்.