நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு குமாரபாளையத்தில் தன்வந்திரி நர்ஸிங் கல்லூரி சார்பில், உலக
அல்ஜீமர்ஸ் தின பேரணி நடந்தது.உலகம் முழுவதும் நேற்று ஞாபக மறதி தினமாக
(அல்ஜீமர்ஸ் தினம்) கொண்டாடப்பட்டது.
தன்வந்திரி நர்ஸிங் கல்லூரி சார்பில்
நடந்த பேரணிக்கு, கல்லூரி முதல்வர் அர்விந்த்பாபு தலைமை வகித்தார். ஈரோடு
அரசு மருத்துவமனையின் முன்னாள் மன நல டாக்டர் முனிராஜா, குமாரபாளையம்
இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் அரசு
மருத்துவமனை முன்பு துவங்கிய பேரணி, ராஜம் தியேட்டர் முன் நிறைவடைந்தது.
ஞாபக மறதி குறித்தும், அதை தீர்க்கும் விதம் குறித்தும் மாணவ, மாணவியர்
கோஷங்களை எழுப்பினர்.