sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளாட்சி தேர்தல் களத்தில் புதுமுகங்கள் அதிகம்"கூச்சத்தால்' சூடுபிடிக்காத பிரச்சாரம்

/

உள்ளாட்சி தேர்தல் களத்தில் புதுமுகங்கள் அதிகம்"கூச்சத்தால்' சூடுபிடிக்காத பிரச்சாரம்

உள்ளாட்சி தேர்தல் களத்தில் புதுமுகங்கள் அதிகம்"கூச்சத்தால்' சூடுபிடிக்காத பிரச்சாரம்

உள்ளாட்சி தேர்தல் களத்தில் புதுமுகங்கள் அதிகம்"கூச்சத்தால்' சூடுபிடிக்காத பிரச்சாரம்


ADDED : அக் 02, 2011 12:43 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான பதவிக்கு புதியவர்களே வேட்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். கூச்ச சுபாவத்தால் பிரச்சாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை.சட்டசபை, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுபவர்களில் 95 சதவீதத்தினர் அரசியலில், பழக்க வழக்கங்களில் பழுத்தவர்களாவர். அத்துடன், ஒவ்வொரு வேட்பாளர்களும் சந்திக்க வேண்டிய மக்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், வேட்பு மனுத்தாக்கல் முடிந்ததும் பிரச்சாரத்தை துவக்கி, தேர்தலுக்குள் இரண்டு, மூன்று சுற்றை முடித்து விடுவர்.உள்ளாட்சியில் ஓட்டு எண்ணிக்கை குறைவு என்பதுடன், அந்தந்த பகுதியில் மக்களுடன் சாதாரணமாக பழகக்கூடியவர்கள் கூட, வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.பழக்கம் என்பது வேறாக இருந்தாலும், ஒவ்வொரு வீடாக சென்று, வேட்பாளர்களிடம் தன்னை அறிமுகம் செய்து, தனது கட்சியையும், அதற்கான சின்னத்தையும் கூறி தனக்கும், தன்னோடு போட்டியிடும் தலைவர் அல்லது கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளருக்கும் ஓட்டு கேட்பது புதியவர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 22 முதல் 29ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடந்த நிலையில், கடந்த 27ம் தேதி அமாவாசை என்பதால், அன்றே பலர் பிரச்சாரத்தை துவக்கினர்.இதில், பல புதிய வேட்பாளர்கள் தங்களுக்கு அறிமுகமான, அறிமுகமில்லாத வீடுகளுக்கு சென்று ஓட்டுச்சேகரிக்க அதிக கூச்சமடைந்து, பெயரளவில் ஓட்டுப்போடும்படி கூறிவிட்டு அடுத்தடுத்த வீடுகளுக்கு ஓட்டம் பிடிக்கின்றனர். தாங்கள் யார், என்ன கட்சி, என்ன சின்னம், தனது கட்சியில் தன்னோடு தலைவர் அல்லது கவுன்சிலருக்கு யார் போட்டியிடுகிறார் என்ற எந்த விபரமும் கூறாமல், ஓட்டம் பிடிக்கின்றனர்.

தவிர, பெரும்பாலானவர்கள் கட்சி கூட்டத்துடன் வராமல், தனது குடும்பத்தார், ஓரிரு நண்பர்களுடன் மட்டும் வந்து ஓட்டு சேகரிக்கின்றனர்.ஓட்டு சேகரிக்க வரும் வேட்பாளரிடம் ஏதாவது விபரம் கேட்டால், கூச்சம் கலந்த சிரிப்புடன் தெரிந்த விபரத்தை கூறிவிட்டு நழுவுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.இந்நிலை கட்சி பாகுபாடின்றி அனைத்து வேட்பாளர்களும் கடைபிடிப்பதால், தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. வேட்பாளர்களை கட்சியும், அக்கட்சியின் முக்கிய நபர்களும் உரிய பயிற்சி, ஆலோசனை கூறி அனுப்பினால், அடுத்த சுற்றிலாவது புதிய வேட்பாளர் கேட்கும் வார்த்தைகள் ஓட்டாகும். அல்லது யார் யாரோ வந்து செல்கிறார்கள் என்ற பட்டியலில் இவர்கள் பெயரும் இடம் பெறும் நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us