sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிக்கம்பங்கள் அகற்றம், கட்சி விளம்பரம் அழிப்பு

/

கொடிக்கம்பங்கள் அகற்றம், கட்சி விளம்பரம் அழிப்பு

கொடிக்கம்பங்கள் அகற்றம், கட்சி விளம்பரம் அழிப்பு

கொடிக்கம்பங்கள் அகற்றம், கட்சி விளம்பரம் அழிப்பு


ADDED : அக் 02, 2011 12:46 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மாநில தேர்தல் கமிஷனின் விதிப்படி, பொது இடங்களில் இருந்த கட்சிக் கொடிக்கம்பங்கள் நேற்று அகற்றப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் மாநில தேர்தல் கமிஷன் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. கமிஷன் விதிப்படி பொது இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தன. இந்த கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.பி.எஸ்.பார்க், காந்திஜி ரோடு, மணிக்கூண்டு, மறைமலை அடிகள் வீதி, பெரியார் நகர், மதுரை வீரன் கோவில் வீதி, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, பெருந்துறை சாலை உள்ளிட்ட இடங்களில், சாலையோரமிருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. இரும்பு கம்பங்கள், வெல்டிங் மிஷின் உதவியுடன் வெட்டி எடுக்கப்பட்டன.

தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் என, பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.

சுவர் விளம்பரம் அழிப்பு: மாநகரப் பகுதியில் சுவர்களில் அரசியல் கட்சியினர் எழுதிய பிரச்சாரம், பொதுக்கூட்டம் மற்றும் தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட வாழ்த்து விளம்பரங்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அழித்தனர். வெள்ளை சுண்ணாம்பில் அதிகளவு தண்ணீர் கலந்த கரைசல் மூலம் பெயிண்டினால் எழுதிய விளம்பரங்களை அழித்தனர். இதனால், பெயரளவுக்கு மட்டுமே விளம்பரங்கள் அழிபட்டு, அப்படியே நன்றாக தெரிந்த வண்ணம் தான் உள்ளன.

ஈரோட்டில் நவ., 13ல் ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணம்ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நவம்பர் 13ம் தேதி மாலை 4 மணிக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாஸ திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் தலைவர் உமாபதி, செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் மற்றும் திருப்பதி தர்ம பிரச்சார பரிஷித் சார்பில், நவம்பர் 13ம் தேதி மாலை 4 மணிக்கு, ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் ஸ்ரீனிவாஸ திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 2006 நவம்பர் 13ல், ஈரோட்டில் ஸ்ரீனிவாஸ திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஐந்தாண்டுக்கு பிறகு தற்போதுதான் நடக்க உள்ளது.திருமலை கோவிலில் ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணம் நிகழ்ச்சியை பார்க்க, 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, ஆறு முதல் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும். திருமலை கோவிலில் நடப்பது போலவே, ஆகம விதிப்படி, தேவஸ்தான ஆச்சார்யார்களே நேரில் வந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாஸ திருக்கல்யாண உற்சவத்தை, நடத்துகின்றனர்.ஏற்பாடுகளை ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் செய்து தருகிறது.இந்நிகழ்ச்சி திருமலை திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. கடந்த முறை நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு 70 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அந்த ஆண்டில் தமிழக அளவில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஈரோட்டில்தான் அதிகளவில் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்தாண்டும் அதே அளவு பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படும். திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.உதவி தலைவர் குமரேஷ், துணைச் செயலாளர் முரளிதரன், அறக்கட்டளை உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us