sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொளுத்தும் வெயிலால் தவிக்கும் வேட்பாளர்கள்முழுமையாக பிரச்சாரம்செய்ய முடியாத நிலை

/

கொளுத்தும் வெயிலால் தவிக்கும் வேட்பாளர்கள்முழுமையாக பிரச்சாரம்செய்ய முடியாத நிலை

கொளுத்தும் வெயிலால் தவிக்கும் வேட்பாளர்கள்முழுமையாக பிரச்சாரம்செய்ய முடியாத நிலை

கொளுத்தும் வெயிலால் தவிக்கும் வேட்பாளர்கள்முழுமையாக பிரச்சாரம்செய்ய முடியாத நிலை


ADDED : அக் 05, 2011 02:51 AM

Google News

ADDED : அக் 05, 2011 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டில் கொளுத்தி எடுக்கும் வெயிலால் வேட்பாளர்கள் முழுமையாக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.

ஈரோட்டில் கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை சுள்ளென அடிக்கும் வெயிலில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கடும் சோதனையாக அமைந்துள்ளது இந்த வெயில்.

ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் கொளுத்தி எடுக்கும் வெயிலால் முழுமையான பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். காலை 6 மணிக்கெல்லாம் பிரச்சாரத்தை துவங்கும் வேட்பாளர்கள் அதிகப்பட்சம் பகல் 11 மணி வரையே பிரச்சாரத்தில் ஈடுபட முடிகிறது. அதன்பின் அடிக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் வேட்பாளருடன் வந்தவர்கள் சோர்ந்து ஒதுங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.மீண்டும் மாலை 4, 5 மணிக்கு துவங்கும் பிரச்சாரத்தை கஷ்டப்பட்டு இரவு 10 மணி வரை நடத்தி முடிக்கின்றனர். கவுன்சிலர்களுக்கு போட்டியிடுபவர்கள் எப்படியோ மெல்ல மெல்ல அக்டோபர் 15ம் தேதிக்குள் தனது வார்டில் பிரச்சாரத்தை முடித்துவிடுவர். ஆனால், மேயர் வேட்பாளர்களின் பாடு திண்டாட்டம் தான். அதுவும் வெற்றிவாய்ப்பை எதிர்பார்க்காமல், கட்சியின் கவுரவத்துக்காக கொஞ்சம் ஓட்டுக்களை எதிர்பார்த்து போட்டியிடுபவர்களும், சுயேட்சைகளும் பிரச்னையின்றி நிம்மதியாக பிரச்சாரம் செய்கின்றனர்.

அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள்தான், வெயிலை எதிர்கொண்டு பிரச்சாரத்தை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.






      Dinamalar
      Follow us