sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டுக்கு பணம் தடுக்கப்படும்: தேர்தல் பார்வையாளர் உறுதி

/

ஓட்டுக்கு பணம் தடுக்கப்படும்: தேர்தல் பார்வையாளர் உறுதி

ஓட்டுக்கு பணம் தடுக்கப்படும்: தேர்தல் பார்வையாளர் உறுதி

ஓட்டுக்கு பணம் தடுக்கப்படும்: தேர்தல் பார்வையாளர் உறுதி


ADDED : அக் 11, 2011 02:34 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:''உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பது தடுக்கப்படும்,'' என, ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகளை, நேற்று மாவட்டத் தேர்தல் பார்வையாளர் பாலச்சந்திரன் ஆய்வ செய்தார்.

தொடர்ந்து, பெரியார் நகர் கூட்டுறவு அச்சகத்தில்ஓட்டுச்சீட்டுகள் அச்சிடும் பணியை ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல் குறித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் வைத்து பிரச்சாரம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வினரின் பிரச்சார நோட்டீஸ் குறித்து விளக்கம் கேட்டு, மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல் படி விதிமீறல் குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க அனைத்து வித கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் வடிவேலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us