/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பிரச்சாரம்
/
பெருந்துறையில் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பிரச்சாரம்
ADDED : அக் 11, 2011 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் சரஸ்வதி, மற்றும் வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கு, 'இரட்டை இலை' சின்னத்தில் ஓட்டு போடுமாறு, எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம் தீவிர பிரச்சாரத்தை துவக்கினார்.செல்லும் இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அவருடன், பேரூர் செயலாளர்கள் பெருந்துறை கல்யாணசுந்தரம், க.செ.பாளையம் கைலங்கிரி குப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜெகதீஷ், இலக்கிய அணி மாவட்ட தலைவர் அருள்ஜோதி செல்வராஜ், இளைஞரணி ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், மோகன்குமார், நம்பியார் நாச்சிமுத்து, சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

