/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளுக்கு குவியும் ஆர்டர்
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளுக்கு குவியும் ஆர்டர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளுக்கு குவியும் ஆர்டர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளுக்கு குவியும் ஆர்டர்
ADDED : அக் 12, 2011 01:33 AM
ஈரோடு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள ஸ்வீட் கடைகளில்
இனிப்பு வகைகளுக்கு 'ஆர்டர்' குவிந்து வருகிறது.நாடு முழுவதும் அக்டோபர்
26ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாநகர
மக்களும் தீபாவளியை கொண்டாடத் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில்
புத்தாடை, இனிப்பு, பட்டாசு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. புத்தாடைகள்
வாங்க ஈரோடு ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.அதுபோல், தீபாவளியன்ற
இனிப்பு வகையில்லாத வீடுகளை காண்பது அரிது.
ஈரோட்டில் முன்பெல்லாம்
தீபாவளிக்கு இனிப்பு மற்றும் பலகாரங்கள் அனைத்தையும் பெரும்பாலும்
வீடுகளிலேயே செய்துவிடுவர். வேலைப்பளு, நேரமின்மை, புதுமையான சுவையை
எதிர்பார்ப்பது போன்ற காரணங்களால், தற்போது ஸ்வீட் கடைகளை மக்கள்
நாடுகின்றனர்.பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர், தங்கள் வீட்டுத் தேவைக்கும்,
நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு வழங்கவும் ஸ்வீட் வகைகளை கால் கிலோ, அரை
கிலோ, ஒரு கிலோ என்ற எடையளவில் வாங்க, தற்போதே மொத்தமாக ஆர்டர்
கொடுத்துள்ளனர்.
ஈரோட்டிலுள்ள பல ஸ்வீட் கடைகளுக்கு போதுமான ஆர்டர்
கிடைத்துவிட்டதால், புதிய ஆர்டரை ஏற்க, அவை தயாராக இல்லை.மைசூர் பா,
ஜிலேபி, பால்கோவா, ரசகுல்லா, பாசந்தி, அல்வா, லட்டு உள்ளிட்ட ஸ்வீட்
வகைகளுக்கு அதிகளவில் ஆர்டர் கொடுத்துள்ளனர். மில்க் ஸ்வீட் வகைகளை
ஏராளமானோர் விரும்பி ஆர்டர் கொடுத்துள்ளனர். தனியார் நிறுவனங்களில்
பணிபுரிவோர் தீபாவளி போனஸை எதிர் நோக்கியுள்ளனர். கைக்கு பணம் வந்ததும்
இன்னும் ஏராளமானோர் ஸ்வீட் கடைகளுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

