/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்டையின் போது காயம்பெண் புலி பரிதாபமாக பலி
/
வேட்டையின் போது காயம்பெண் புலி பரிதாபமாக பலி
ADDED : அக் 12, 2011 01:37 AM
சத்தியமங்கலம்: பவானிசாகர் வனப்பகுதியில் நான்கு வயது பெண் புலி இறந்து
கிடந்தது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள் அதிகம்
வசிப்பதால், இவ்விடத்தை புலிகள் சரணாலயமாக மாற்ற அரசு பரிந்துரை செய்கிறது.
பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட அத்திப்பள்ளம் என்ற இடத்தில்,
வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது, ஒரு பெண் புலி இறந்து கிடந்தது
தெரியவந்தது.மாவட்ட வன அதிகாரி சதீஷ், மண்டல வனப் பாதுகாவலர் அருண்,
பவானிசாகர் ரேஞ்சர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடம் சென்றனர். இறந்த பெண்
புலிக்கு, நான்கு வயது இருக்கும். அது பிற விலங்கை வேட்டையாடியபோது,
விலங்குகளால் அடிபட்டு அக்காயத்தால் இறந்தது தெரியவந்தது.வன உயிர்
மருத்துவர் மனோகரன், புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அதே இடத்தில்
எரித்தனர். பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது, வனத்துறையினரிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

