sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூம்பு ஒலி பெருக்கி ஈரோட்டில் 7 பேர் கைது

/

கூம்பு ஒலி பெருக்கி ஈரோட்டில் 7 பேர் கைது

கூம்பு ஒலி பெருக்கி ஈரோட்டில் 7 பேர் கைது

கூம்பு ஒலி பெருக்கி ஈரோட்டில் 7 பேர் கைது


ADDED : அக் 12, 2011 01:43 AM

Google News

ADDED : அக் 12, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை வைத்து பிரச்சாரம் செய்ததாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேர் தேர்தல் விதி மீறல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. பிரச்சாரத்தின் போது, அரசியல் கட்சி பிரமுகர்கள் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக பிரச்சாரம் செய்யக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பிரச்சாரம் செய்வோர் மீது ஈரோடு மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஈரோடு பெரிய சேமூரை சேர்ந்த ஆனந்தன்(29), பெருந்துறை அருகே கம்புளியாம்பட்டி மோகன்ராஜ்(28), சோலார்புதூர், பாலுசாமி நகர் காதர் அலி(32), திண்டல், புதுகாலனி அலாவுதீன் சித்திக்(23), அதேபகுதியை சேர்ந்த தனசேகர்(24), வில்லரசம்பட்டி சண்முகசுந்தரம்(52), நெருஞ்சிப்பேட்டை கார்த்திகேயன்(25) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us