தி.மு.க., சார்பில் இன்றுசமூக ஊடக பயிற்சி வகுப்புகாங்கேயம்: தி.மு.க., சார்பில் நடக்கும், சமூக ஊடக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கட்சி தலைமை அறிவிப்பின்படி, தகவல் தொழில் நுட்ப அணி முன்னெடுப்பில், திருப்பூர்-தாராபுரம் ரோடு பழவஞ்சிபாளையத்தில் உள்ள, தெற்கு மாவட்ட கட்சி அலுவலக கூட்டரங்கில், சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு, இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இரண்டு மணிநேரம் காணொலி காட்சி வாயிலாக நடக்கவுள்ளது.இதில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞரணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட அணிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.முதலை நடமாட்ட புகார்வனத்துறையினர் ரோந்துதாராபுரம்: தாராபுரம் அருகே சீத்தக்காடு பகுதி அமராவதி ஆற்றில், முதலை நடமாட்டம் இருப்பதாக, மீனவர்கள் மற்றும் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறையினர் அலங்கியம், சீத்தக்காடு பகுதி அமராவதி ஆற்று பகுதியில், முதலை நடமாட்டம் உள்ளதா? என்று ஆய்வு செய்யும் வகையில், ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதலை நடமாட்டம் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில், அலங்கியம் போலீசார் ஆற்றுக்கு செல்லும் வழியில், எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர்.தாராபுரத்தில் ௨௪ மணி நேரமும்மது விற்பதாக பா.ஜ., புகார்தாராபுரம்: தாராபுரம் நகர பா.ஜ., தலைவர் சதீஷ், பொது செயலாளர் செல்வன், இளைஞரணி தலைவர் வினீத் உள்ளிட்ட நிர்வாகிகள், டி.எஸ்.பி. கலையரசனிடம், நேற்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தாராபுரம் நகரில், 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறது. உரிமம் இல்லாத பார்கள், பல இடங்களில் நடத்தப்படுகிறது. இதை தடுக்க மதுவிலக்கு போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பா.ஜ., சார்பில், மக்களை திரட்டி, போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக, டி.எஸ்.பி., கூறியதாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.மகளிர் குழு தயாரிப்புகண்காட்சி துவக்கம்ஈரோடு: ஈரோடு, குமலன்குட்டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் கண்காட்சி விற்பனை துவங்கியது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினை பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவை, துண்டு, ஆயத்த ஆடை, மஞ்சள், குண்டு வெல்லம் உட்பட உணவு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வரும், 20 வரை தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கும்.