தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு செய்திகள்

ஈரோடு செய்திகள்

ஈரோடு செய்திகள்


ADDED : ஜூன் 06, 2024 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2024 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'தமிழக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி'ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட பிரகாஷ், அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரைவிட, 2 லட்சத்து, 38,588 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கராவிடம் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை பெற்று கொண்ட பிரகாஷ் கூறியதாவது:ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் ஈரோடு உட்பட, 40 தொகுதிகளிலும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறேன். மிகப்பெரிய வெற்றிக்கு, தமிழக அரசின், 3 ஆண்டு சாதனைகள், திட்டங்கள், முதல்வரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.இளைஞர் அணிக்கு முன்னுரிமை கொடுத்து, ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய அமைச்சர் உதயநிதி, தேர்தலில் பணியாற்றிய அமைச்சர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி கூறுகிறேன். கட்சி வழிகாட்டுதல்படி, மக்களுக்கான பணியை சிறப்பாக செயலாற்றுவேன். இவ்வாறு கூறினார்.

ஈரோட்டில் தேர்தல் விதிமீறல்பா.ஜ.,வினர் மீது வழக்கு ஈரோடு: தேர்தல் விதிமுறைகளை மீறி, பிளக்ஸ் பேனர் வைத்திருந்ததாக, பா.ஜ.,வினர் மீது சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஈரோடு அருகே, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரியில், ஈரோடு லோக்சபா தொகுதிக்கான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இந்நிலையில் சித்தோடு, சத்தி சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பா.ஜ., சார்பில் பிளக்ஸ் பேனர் கடந்த, 4ல் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு தேர்தல் கமிஷனில் உரிய அனுமதி பெறவில்லை.தேர்தல் விதிமுறைகளை மீறி, பேனர் வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பிளக்ஸ் பேனரை அங்கிருந்து போலீசார் அகற்றி, ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். பேனர் வைத்தவர்கள் யார் என்பது குறித்து, சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us