தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு சிலவரி செய்திகள்

ஈரோடு சிலவரி செய்திகள்

ஈரோடு சிலவரி செய்திகள்


ADDED : பிப் 06, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கார் கவிழ்ந்து காயத்துடன்

உயிர் தப்பிய கல்லுாரி மாணவன்

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அருகே, கல்லுாரி மாணவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கோல்காரனுாரை சேர்ந்த சுகுமார் என்பவரது மகன் தரனிஷ் சாய் கிரசாத், 21. இவர், ஊட்டியில் தனியார் அகாடமியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, ஊட்டியில் இருந்து தனது சொந்த ஊர் செல்வதற்காக காரை ஓட்டி சென்றுள்ளார். பவானி

சாகர் அடுத்துள்ள, பெரிய கள்ளிப்பட்டி அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், இடதுபுறம் உள்ள வனப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், காரை ஓட்டிய மாணவன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வரும் 8ல் பொது வினியோக

திட்ட குறைதீர் முகாம்

ஈரோடு, பிப். 6-

ஈரோடு மாவட்டத்தில், பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வரும், 8ல், ஈரோடு தாலுகா தவிர மற்ற, 9 தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது.

முகாமில், புதிய ரேஷன் கார்டு பெற மனுக்கள் பெறுதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்த்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்காக பொதுமக்கள் மனு வழங்கி தீர்வு பெறலாம். இதன்படி, தாலுகா வாரியாக பெருந்துறை - நல்லாம்பட்டி ரேஷன் கடையிலும், மொடக்குறிச்சி - ஈஞ்சம்பள்ளி, கொடுமுடி - நாமகநாயக்கன்

பாளையம், கோபி - புதுக்கரைபுதுார் நஞ்சை கோபி, நம்பியூர் - குருமந்துார், பவானி - சிங்கம்பேட்டை 1, படவல்கால்வாய் கிராமம், அந்தியூர் - பிரம்மதேசம் 2, சத்தியமங்கலம் - பூசாரிபாளையம், தாளவாடி - கெத்தேசால் ரேஷன் கடையிலும்

முகாம் நடக்க உள்ளது.

ரூ.5.53 லட்சத்துக்கு

பொருட்கள் ஏலம்

ஈரோடு: மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 13,322 தேங்காய்கள் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 46.69 முதல், 57.39 ரூபாய் வரையிலான விலையில், 4,405 கிலோ எடை கொண்ட தேங்காய் விற்பனையானது. இவை, இரண்டு லட்சத்து, 29 ஆயிரத்து, 887 ரூபாய்க்கு விலை போனது.கொப்பரை தேங்காய், 125 மூட்டைகளில் வரத்தாகி முதல் தரம் ஒரு கிலோ, 134.36 முதல், 146.99 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 81.67 முதல், 132.60 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 2,486 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், மூன்று லட்சத்து, 23,362 ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, ஐந்து லட்சத்து, 53,249 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்று சஞ்சீவிராய பெருமாள்

கோவிலில் சிறப்பு யாகம்

டி.என்.பாளையம், பிப். 6- -

கள்ளிப்பட்டி அருகே உள்ள, பெருமுகை ஸ்ரீதேவி பூதேவி சமேத சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாக வேள்வி இன்று நடைபெறுகிறது. இன்று மாலை, 4:30 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் வேள்வி நடைபெற்று, 6:30 மணிக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. யாக வேள்வி பூஜையில் மாணவர்கள் கலந்து கொண்டு இறை அருள் பெற வேண்டும் என, கோவில்

நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஹிந்து முன்னணியினர்

மீது வழக்குப்பதிவு

ஈரோடு: மதுரை திருப்பரங்குன்றம் மலையின், புனிதத்தை காக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில் கடந்த, 4ல் அறவழி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனை கண்டித்து, ஈரோட்டில் ஹிந்து முன்னணி சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.இது தொடர்பாக ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்தி, மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட, 49 பேர் மீது ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் பயனடைய

வேளாண்துறை அழைப்பு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் வட்டார வேளாண் துறையில், மானியத்தில் வழங்கப்படும் நிலக்கடலை விதைகளை வாங்கி விவசாயிகள் பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் வட்டார வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

எதிர் வரும் பருவத்தில், நிலக்கடலை விதைக்க விரும்பும் விவசாயிகளுக்கு, டி.எம்.வி.,பட்டாணி ரகத்தை மானிய விலையில் வழங்க தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் பவானிசாகர் வட்டார வேளாண் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மேலும் நிலக்கடலை விதைப்பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகளும், விதைகளை வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us