ADDED : ஜூன் 09, 2026 01:54 AM

ஈரோடு; ஈரோடு, ரங்கம்பாளையம், கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவிகள், சிலம்பம் போட்-டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதுடில்லியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கடந்த மாதம் நடந்தது. இதில் ஈரோடு ரங்-கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய பள்ளி மாணவிகள் வைஷ்ணவி மற்றும் வைஷாலி, 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஒற்றைக்குச்சி (சிங்கிள் ஸ்டிக்) பிரிவில் தங்கப்பதக்கம் பெற்-றனர். முன்னதாக இருவரும் கொடைக்கானலில் நடந்த தென்னிந்திய சிலம்ப போட்டியிலும் முத-லிடம் பிடித்தனர்.
சாதனை படைத்த இருவரையும் பள்ளி தலைவர் சின்னசாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன் மற்றும் உதவி தலைவர்கள் சோம-சுந்தரம், தெய்வசிகாமணி, இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன், முதல்வர் நதியா அரவிந்தன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
