தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நான்கு ஆண்டுக்குள்3வது தேர்தலை சந்திக்கும் ஈரோடு

நான்கு ஆண்டுக்குள்3வது தேர்தலை சந்திக்கும் ஈரோடு

நான்கு ஆண்டுக்குள்3வது தேர்தலை சந்திக்கும் ஈரோடு


ADDED : ஜன 08, 2025 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2025 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நான்கு ஆண்டுக்குள்3வது தேர்தலை சந்திக்கும் ஈரோடு

ஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி, 2021 சட்டசபை தேர்தலில், காங்., வேட்பாளர் திருமகன் ஈவெரா, 8,523 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த, 2023 ஜன.,4ல் திருமகன் ஈவெரா, உடல் நலக்குறைவால் இறந்தார். பிப்.,27ல் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை இளங்கோவன், 66,233 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த டிச., 14ல் இளங்கோவன் இறந்ததால், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்., ௫ல் தேர்தல் நடக்கிறது.

இதன் மூலம் இத்தொகுதி மக்கள், ஐந்து ஆண்டுக்குள், மூன்றாவது சட்டசபை தேர்தலை எதிர் கொள்கின்றனர். தேர்தல் தேதி நேற்று மதியம் அறிவிக்கப்பட்டவுடன், நடத்தை விதி அமலுக்கு வந்தது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை அலுவலகங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் மூடப்பட்டன. பி.எஸ்.பார்க்கில் முன்னாள் முதல்வர்கள்

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் மூடப்பட்டன. பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பிலான போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டன. அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் 'புரட்சி தலைவி ஜெ.ஜெயலலலிதா மேம்பாலம்' என்ற எழுத்துக்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகளை பூட்டி சீல் வைத்தனர். அடுத்த, 48 மணி நேரத்துக்குள் கட்சி கொடிகள், கொடி கம்பங்கள், பிற போர்டுகளை அகற்றி கொள்ளும்படி, அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us