ADDED : மார் 20, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
பவானிசாகர்: பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கழு-தைப்புலி, விவசாய தோட்டங்கள் வழியாக இக்கரை தத்தப்-பள்ளி அருகே தனியார் பேப்பர் மில் பகுதியில் தரிசு நிலத்தில் நேற்று நடமாடியது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த முள் கம்பி வேலியில் சிக்கி விட்டது. இதைப்பார்த்து அச்சமடைந்த மக்கள், பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் மீட்க முயன்றபோது தப்பி புதருக்குள் சென்று மறைந்தது. அப்பகுதியில் வெகுநேரம் தேடியும் கிடைக்க-வில்லை. கழுதைப்புலி நடமாட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை-யுடன் இருக்குமாறு, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
