அத்தியாவசிய பணியாளர், போலீசார் தபால் ஓட்டை செலுத்த அறிவுறுத்தல்
அத்தியாவசிய பணியாளர், போலீசார் தபால் ஓட்டை செலுத்த அறிவுறுத்தல்
ADDED : ஏப் 16, 2026 06:15 AM
ஈரோடு : சட்டசபை தேர்தலில் அத்யாவசிய பணிகளுக்காக பணியமர்த்தப்படும் பணியாளர்கள், தேர்தல் நாளில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள், பிற பணியாளர்கள் தபால் மூலம் ஓட்டை செலுத்தலாம்.
அவர்களுக்கு தபால் ஓட்டு அளிப்பதற்கு ஏதுவாக, அத்தியாவசிய பணிகளுக்காக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு படிவம் 12டி, 12 ஆகியவை வழங்கி, தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். இவர்கள் தபால் ஓட்டை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்தலாம். இதன்படி, ஈரோடு கிழக்கு - மாநகராட்சி ஆணையர், ஈரோடு மேற்கு - ஈரோடு ஆர்.டி.ஓ., - மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் தொகுதிக்கு அங்குள்ள தாசில்தார் அலுவலகத்திலும், பவானி
சாகருக்கு சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்திலும், கோபி - சப் கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டை பெற்று, அங்குள்ள மையத்தில் வாக்களிக்கலாம்.
அத்தியாவசிய பணியாளர்கள், போலீசார் ஆகியோர் வரும், 17, 18, 19 ஆகிய நாட்கள் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணிக்குள்ளும், தேர்தல் பணியில் ஈடுபடும் இதர பணியாளர்கள் வரும், 20, 21, 22 ஆகிய நாட்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை தபால் ஓட்டை செலுத்தலாம்.
