/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைப்பாதையில் கவிழ்ந்த ஈச்சர் லாரி
/
மலைப்பாதையில் கவிழ்ந்த ஈச்சர் லாரி
ADDED : செப் 24, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கோவை மாவட்டம் அன்னுாரிலிருந்து, காலி சாக்குப்பைகளை ஏற்றிய ஒரு ஈச்சர் லாரி, கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டைக்கு புறப்பட்டது. சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை, ௮:௦௦ மணிக்கு சென்றது.
15வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமின்றி தப்பினார். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நண்பகல், ௧௨:௦௦ மணிக்கு லாரியை அகற்றிய பிறகு, போக்குவரத்து சீரானது.