கோபி சட்டசபை தொகுதிக்கு இ.வி.எம்., இயந்திரம் வருகை
கோபி சட்டசபை தொகுதிக்கு இ.வி.எம்., இயந்திரம் வருகை
ADDED : மார் 26, 2026 05:33 AM
------கோபி, கோபி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோபி சட்டசபை தொகுதியில் ஏப்., 23ல், 309 ஓட்டுச்சாவடிகளில், 2.37 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இந்நிலையில், அந்த ஓட்டுச்சாவடிக்கு தேவையான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரு கன்டெய்னர் லாரிகளில் கோபி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று அதிகாலை 1:40 மணிக்கு வந்தது. அதை கோபி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தம் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில், ஸ்ட்ராங் ரூமில் வைத்தனர். பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் என தலா 370. வி.வி., பேட் 401 பெறப்பட்டது. பின் அந்த அறையை பூட்டி சீல் வைத்து, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
