தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இ.வி.எம்., இயந்திரங்கள் 2ம் கட்டமாக ஒதுக்கீடு

இ.வி.எம்., இயந்திரங்கள் 2ம் கட்டமாக ஒதுக்கீடு

இ.வி.எம்., இயந்திரங்கள் 2ம் கட்டமாக ஒதுக்கீடு


ADDED : ஏப் 20, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள், இரண்டாம் கட்ட சுழற்சி மூலம் ஓட்டுச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,), கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் போன்றவை தயாராக உள்ளது. முதற்கட்ட சுழற்சி முறையில் கடந்த, 24ல் அந்தந்த தொகுதிக்கு இயந்திரம் ஒதுக்கப்பட்டது.

இவ்வாறாக எட்டு தொகுதிகளுக்கு, 2,379 ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதல் இயந்திரங்கள் உட்பட, 3,532 மின்னணு ஓட்டுப்

பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 வி.வி.பேட் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் ஓட்டுச்சாவடி வாரியாக இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. தேர்தல் ஆணைய இணைய தளத்தில் சுழற்சி செய்து, அப்பட்டியல் தொகுதி வாரியாக வழங்கப்பட்டது. தேர்தல் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் சுழற்சி செய்து, அப்பட்டியல் தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.

இந்த இயந்திரங்களே அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு வரும், 22ல் எடுத்து செல்லப்பட்டு, 23ல் ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us