தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விலகல்

அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விலகல்

அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விலகல்


ADDED : ஆக 28, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டசபை தொகுதியில், 2016ல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனவர் ராஜாகிருஷ்ணன். இவர் அம்மா பேரவை மாநில துணை செயலராக இருந்த நிலையில், நேற்று அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

இரு தலைமுறைகளாக, அ.தி.மு.க.,வுக்கு பாடுபட்டது என் குடும்பம். அந்தியூர் தொகுதியில் பல்வேறு கட்சி பதவிகள், எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். தற்போது கட்சியில் இருந்து முழு மனதுடன் விலக விரும்புகிறேன். அதற்கான காரணத்தை பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சிடம், கடிதம் வாயிலாக தெரிவிப்பேன். கட்சியில் இருக்கும்போது துதி பாடிவிட்டு, வெளியே செல்லும்போது வசைபாட உடன்பாடு இல்லை. தற்போதைக்கு வேறு கட்சியில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us