ADDED : ஏப் 02, 2026 04:17 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆறு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு நேற்று முழு ஆண்டு தேர்வு துவங்கியது. 6, 8ம் வகுப்புக்கு முற்பகலிலும், 7, 9 வகுப்புக்கு பிற்பகலிலும் தமிழ் பாட தேர்வு நடந்தது.
வரும் 6ல் அனைத்து வகுப்புக்கும் பிற்பகலில் விருப்ப மொழி பாட தேர்வு நடக்கிறது. 8ல் உடற்கல்வியியல் தேர்வு நடக்கிறது.7ல் ஆங்கில தேர்வு 6,8 வகுப்புக்கும், 7,9 வகுப்புக்கு கணித தேர்வு நடக்கிறது. 9ல் கணித தேர்வு 6,8 வகுப்புக்கும், 7,9 வகுப்புக்கு ஆங்கில தேர்வு நடக்கிறது. 13ல் அறிவியல் தேர்வு 6,8 வகுப்புக்கு நடக்கிறது. 7,9க்கு சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. 16ல் சமூக அறிவியல் தேர்வு 6,8 வகுப்புக்கும், 7,9 வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது என பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.
