ADDED : நவ 05, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை,
சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலராக, கடந்த நான்கு
ஆண்டுகளாக பொறுப்பு வகித்த சரவணன், சேலம், வெண்ணங்கொடி முனியப்ப
சுவாமி கோவில் செயல் அலுவலராக பணியிடம் மாற்றப்பட்டார்.
அவருக்கு
பதிலாக திருப்பூர் மாவட்டம், அவிநாசி, லிங்கேஸ்வரர் கோவில் செயல்
அலுவலராக பணியாற்றி வந்த சபரீஸ்குமார், பணி மாறுதலில் நேற்று
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலராக
பொறுப்பேற்றார். முன்னதாக, சபரீஸ் குமார் சென்னிமலை முருகனை
தரிசனம் செய்தார்.
புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலர்
சபரீஸ்குமாருக்கு, கோவில் அறங்காலவர் குழு தலைவர் பழனிவேலு,
கோவில் பணியாளர்கள், பல்வேறு கோவில் கமிட்டி நிர்வாகிகள் வாழ்த்து
தெரிவித்தனர்.
