ADDED : மே 15, 2026 06:15 AM

ஈரோடு::ஈரோட்டில் மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், கோடைகால சிறப்பு கண்காட்சி விற்பனை நேற்று துவங்கியது.
மேலாளர் சேவியர் கூறியதாவது:தமிழகம், தென்னிந்திய மாநிலங்களின் கலையழகு மிக்க பித்தளை, பஞ்சலோகம், மரம், கற்களால் ஆன சிற்பங்கள், பித்தளை விளக்குகள், மொராதாபாத் கலைப்பொருட்கள், ஜெய்பூர் வண்ண ஓவியங்கள், தஞ்சை ஓவியங்கள், தஞ்சை கலைத்தட்டு, ஆயில் பெயிண்டிங், வலம்புரி சங்கு, அகர்பத்திகள், வாசனை திரவியங்கள், சுவர் அலங்கார பேனல், மசாஜ் பொருட்கள், அலாய் மெட்டல், வெள்ளை உலோக கைவினை பொருட்கள், காகிதக்கூழ் பொம்மைகள், மாக்கல் விநாயகர், சந்தனக்கட்டை, சென்னப்பட்னா பொம்மைகள், ராசி கற்கள், இதர கற்கள் பதித்த ஐம்பொன் நகைகள், ஸ்படிக மாலைகள் விற்பனைக்கு உள்ளன. வரும், 30ம் தேதி வரை கண்காட்சி நடக்கும். இவ்வாறு கூறினார்.
