/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி துவக்கம்
/
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி துவக்கம்
ADDED : டிச 11, 2025 06:34 AM
ஈரோடு: ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள, ஆவின் மாட்டுத்தீ-வன ஆலையில் இருந்து, தனியார் திரையரங்கம் வரையிலான இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றுதல் மற்றும் தனியார் திரையரங்கு அருகில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி கால்-வாயில் நான்கு வழிப்பாலம் அமைக்கும் பணிகள் ரூ.5.48 கோடி மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்து, சென்னிமலையில் இருந்து ஈரோடு வரும் வாகனங்கள் ரங்கம்பாளையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் வழியாக திரு ப்பி விடப்பட்-டுள்ளது.
இதேபோல் ஈரோட்டில் இருந்து, சென்னிமலை செல்லும் வாக-னங்கள் அணைக்கட்டு ரோடு வழியாக முத்தம்பாளையம் சென்று, சென்னிமலை சாலைக்கு வரும் வழியில் திருப்பி விடப்-பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்து முன்னறிவிப்பு இல்லா-ததால், நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாலையில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற வாகனங்கள் உட்பட ஏரா-ளமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றதால் போக்கு-வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

