sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

/

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு


ADDED : டிச 29, 2025 09:48 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக பாசனத்தில், தற்போது நெல் அறுவடை துவங்கியுள்ளது. எனவே விரைந்து நெல் கொள்முதல் நிலை-யத்தை திறக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் நடப்-பாண்டு, பெரும்பாலும் பவானி, ஐ.ஆர்.20, இட்லி குண்டு, கோ-43, கருப்பு கவுனி நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்தாண்டு நோய் பாதிப்பில்லை. நீர் வினியோகமும் சீராக இருந்-தது. வானிலை மாற்றத்தாலும் பிரச்னை இல்லை. இதனால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நெல்லும் தரமானதாக இருக்கும். எனவே அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கடந்தாண்டு, 14 கொள்முதல் நிலையம் திறக்கப்-பட்டது. அதுபோல் இந்தாண்டும் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us