/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு நீட்டிப்பு
/
கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு நீட்டிப்பு
ADDED : டிச 15, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைபடை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றை படை மதகுகள் மூலம், ௧.௦௩ லட்சம் ஏக்கருக்கு, கடந்த ஜூலை, 31 முதல் ஆக., 14ம் தேதி வரை சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் விடப்பட்டது.
அதன் பின் ஆக., 15 முதல் கடந்த, 12ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முதல்போக நன்செய் பயிருக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கையை முன்னிட்டு வரும், 27ம் தேதி வரை, 15 நாட்களுக்கு நீர் வினியோகிக்கும் காலத்தை நீட்டிப்பு செய்து, கோவை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

