/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிகாரிகள் எனக்கூறி பணம் பறிப்பு
/
அதிகாரிகள் எனக்கூறி பணம் பறிப்பு
ADDED : நவ 23, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: ஈரோடு மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜா, 54; டிரைவர். சித்தோடை சேர்ந்தவர் கார்த்திகேயன், 45; கட்டுமான தொழிலாளி. இருவரும் நேற்று முன்தினம், பி.எம்.டபிள்யூ., காரில் சென்னை நோக்கி சென்றனர்.
மாலை, 4:30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த தென்பசியார் கூட்ரோடு அருகே காரை நிறுத்தி, அவ்வழியாக சென்ற லாரி டிரைவர்களிடம், தங்களை சிறப்பு அதிகாரிகள் எனக் கூறி, பணம் வாங்கியுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த மயிலம் போலீசார், சந்தேகத்தில் அவர்களிடம் விசாரித்தனர். அதில், இருவரும் அதிகாரிகள் எனக்கூறி, லாரி டிரைவர்களிடம் பணம் பறித்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

