கள்ளக்காதலி எரித்து கொலை கள்ளக்காதலன் சிக்கினார்
கள்ளக்காதலி எரித்து கொலை கள்ளக்காதலன் சிக்கினார்
ADDED : ஜூலை 29, 2026 11:24 PM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடில், வினோதினி, 24, என்பவரை, நடத்தையில் சந்தேகப்பட்டு, எரித்து கொன்ற கள்ளக்காதலன் நவநீதகிருஷ்ணன், 26, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோ டு, மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோதினி. இவரது கணவர் சூர்யா. தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், வினோதினி தனியாக வசித்தார்.
இந்நிலையில், வினோதினிக்கு, சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம ் ' மூலம் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், 26, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வினோதினியின் நடத்தையில் சந்தேகப்பட்ட நவநீதகிருஷ்ணன், ஜூலை 28ம் தேதி நள்ளிரவு, வினோதினி வீட்டிற்கு வந்து, அவர் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், வினோதினி உயிரிழந்தார். ஈரோடு போலீசார், நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர்.
