ADDED : ஏப் 14, 2025 06:57 AM
ஈரோடு: ஈரோடு சட்ட கல்லுாரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் மீனாட்சி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி துணை தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன், மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து பேசினார்.மூன்றாமாண்டு மாணவர் ஞானபிரகாஷ், தமிழகம் முழுவதும் பல்வேறு தமிழ் பேச்சு போட்டிகளில் பங்கேற்று, 30க்கும் மேற்பட்ட விருது வென்றுள்ளார். சமீபத்தில் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த மாநில பேச்சுப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்து, 75000 ரூபாய் ரொக்கப்பரிசு பெற்றார். மாணவரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக கல்லுாரி முதல்வர் கஜேந்திரராஜ் வரவேற்றார்.
துணை முதல்வர் அக்பர் அலி பாய் நன்றி கூறினார். விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

