ADDED : மே 27, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
தாளவாடி: தாளவாடி அருகேயுள்ள கரளவாடி பிரிவை சேர்ந்த விவசாயி சித்துராஜ், 45; நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை பீஸ் போடுவதற்காக, டிரான்ஸ்பார்மரில் ஏணி வைத்து ஏறி பீஸ் போட முயன்றார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
