டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை? தலைமறைவு விவசாயிக்கு வலை
டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை? தலைமறைவு விவசாயிக்கு வலை
ADDED : செப் 18, 2026 06:56 AM
அ நிறம் | அளவு
பவானி;பவானி
அருகே கண்ணாடிபாளையம், போத்தநாயக்கனுாரை சேர்ந்தவர்
காளநாயக்கர், 70; விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த
ரங்கசாமிக்கும், 50, நிலம் மற்றும் வண்டித்தடம் தொடர்பாக பிரச்னை
உள்ளது.
ரங்கசாமி டிராக்டரில் தோட்டத்துக்கு நேற்று காலை சென்றார்.
அப்போது காளநாயக்கர் டிராக்டரை வழிமறித்து, நிலம் மற்றும்
வண்டித்தட பிரச்னையை தீர்த்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இது
தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரங்கசாமி
ஓட்டி வந்த டிராக்டர் காளநாயக்கர் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ
இடத்தில் காளநாயக்கர் இறந்தார். ரங்கசாமி டிராக்டரை நிறுத்திவிட்டு
தலைமறைவாகி விட்டார். பவானி போலீசார் கொலை வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.
