/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயிகளின் கோரிக்கை மதிக்கப்படவில்லை கொ.ம.தே.க., ஈஸ்வரன் குற்றச்சாட்டு
/
விவசாயிகளின் கோரிக்கை மதிக்கப்படவில்லை கொ.ம.தே.க., ஈஸ்வரன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் கோரிக்கை மதிக்கப்படவில்லை கொ.ம.தே.க., ஈஸ்வரன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் கோரிக்கை மதிக்கப்படவில்லை கொ.ம.தே.க., ஈஸ்வரன் குற்றச்சாட்டு
ADDED : பிப் 16, 2025 03:57 AM
ஈரோடு: ''தெருநாய்கள் கடித்து ஆடுகளை இழந்த விவசாயிகளின் கோரிக்கைகள் மதிக்கப்படவில்லை,'' என்று, கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபத்தில், 500க்கும் மேற்-பட்ட ஆடுகள், தெருநாய்கள் கடித்து இறந்துள்ளன. ஆடு மேய்ப்-பவர்களின் வாழ்வாதாரத்தை அரசு சிந்திக்க வேண்டும். பூங்-காவில் சிறுவர்களையும், தெருக்களில் பெண்களையும் நாய்கள் கடிப்பதை பார்க்க முடிகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய் கடித்து ஆடு உள்ளிட்டவை இறந்தால், அடுத்த நாளே இழப்பீடு வழங்க வேண்டும். இதற்காக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இப்பிரச்னையில் மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்படவில்லை என்பது வருத்தம்.
அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் செயல்பாட்டை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். அவர் 'திஷா' கூட்டத்தில் பங்கேற்-றதில் எந்த தவறுமில்லை. ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் பங்-கேற்பது சரிதான். அதேநேரம் அவரது கட்சி விசுவாசத்தை யாரு-டனும் ஒப்பிட முடியாது. உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது போன்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பது உட்கட்சி பிரச்னை. கள் இயக்கம் நல்லசாமி, கள்ளுக்கான தடையை நீக்க தொடர்ந்து போராடி வருகிறார். இதன் மூலம் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்படுவர். கள்ளுக்கான தடையை நீக்க நானும் ஆதரிக்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
அவருடன் மாநில இளைஞரணி செயலர் சூரியமூர்த்தி, பொரு-ளாளர் கே.கே.சி.பாலு உட்பட பலர் இருந்தனர்.

